2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அவருக்கு பிறகு சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று, தான் சிறுவனாக நடித்த போது ஒரு பட்ட பெயரை சூட்டிக்கொண்டார். என்றாலும் அந்த பட்டத்தை அவர் தொடரவில்லை. அதையடுத்து தனுசுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு சூட்டினார். ஆனால் ரஜினி ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று சொல்லி அதை அவர் ஏற்கவில்லை.
இப்படியான நிலையில், கதையின் நாயகியாக தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார் நயன்தாரா. ஆனால் சமீபகாலமாக தான் நடித்த சில படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததை அடுத்து இனிமேல் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று சமீபத்தில் கேட்டுக் கொண்டார் நயன்தாரா.
இந்த நிலையில் நடிகை குஷ்பு இடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை நயன்தாரா தவிர்த்து குறித்து கேட்டபோது, ''நடிகர் நடிகைகளுக்கு பட்டம் கொடுக்க வேண்டியதில்லை. நான் நடித்தபோதெல்லாம் யாருக்கும் இது போன்ற பட்டங்கள் கொடுக்கப்படவில்லை. அதனால் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தவிர்த்து இருப்பது சரியான முடிவாகவே நான் பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்க்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். மற்றபடி எந்த நடிகர்களையும் பட்டப்பெயர் வைத்து அழைக்காமல் பெயரை சொல்லி அழைத்தாலே போதுமானது என்பதே என்னுடைய கருத்து'' என்று கூறினார் குஷ்பூ.