மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு | ரசிகர் கன்னத்தில் பளார் விட்ட ராகினி | தமிழ் சினிமாவை குறை சொன்ன ஜோதிகா: மவுனம் கலைப்பாரா சூர்யா? | பிளாஷ்பேக்: முதல் கன்னடத்து பசுங்கிளி | ஆரம்பமானது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக் : ஆன்மிக வாழ்க்கை வாழும் நடிகை சச்சு | மம்முட்டியின் பிரம்மயுகத்தை பாராட்டிய அமீர்கானின் மனைவி | மூன்றாவது முறையாக சமந்தா படத்தை இயக்கும் நந்தினி ரெட்டி | சங்கங்கள் மூலம் சுமூகமாக முடிவுக்கு வந்த நடிகை - இயக்குனர் பிரச்னை |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து 'பைசன் - காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகிறார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். மாரி செல்வராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பைசன் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் அவர், " நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால் நீ கதவுகளை அடைக்கிறாய். நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார் மாரி.