விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
சின்னத்திரை நடிகை, வீஜே என ஒரு காலக்கட்டம் வரை கலக்கி கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. நடனத்தில் அதிகம் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் ஜீவா மற்றும் சிவகார்த்திகேயனுடன் நடனமாடி புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பினியாக இருந்த போது ரிஸ்க்கான நடன அசைவுகளை ஆடியுள்ள ஐஸ்வர்யா, அதை தற்போது வீடியோவாக பதிவேற்றியுள்ளார். இதை பார்த்து பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வரும் நிலையில், அந்த வீடியோவின் கேப்ஷனிலேயே 'கமெண்ட் செய்வதற்கு முன் இதை படியுங்கள். இது மோட்டிவேஷன் வீடியோ. கர்ப்பகாலத்தில் தேவையற்ற பயத்தை பெண்கள் கைவிட வேண்டும். நான் முதலில் எனது டாக்டருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் எனது சந்தேகங்களை தீர்த்து வைத்ததோடு என்னுடைய லைப்ஸ்டைலை தொடரவும் அறிவுரைகளை வழங்கினார்' என விளக்கமான பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார்.
மேலும், இது இப்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. ஐஸ்வர்யாவிற்கு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்றே அழகான பெண் குழந்தை பிறந்துவிட்டது. நிறைமாத கர்ப்பமாக இருந்த போது நடனமாடிய இந்த வீடியோவை மற்ற பெண்களுக்கும் தைரியமூட்டும் வகையில் இருக்க வேண்டும் என உலக பெண்கள் தினத்தன்று பதிவேற்றி ஐஸ்வர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.