ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் |

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றும் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போகிறார்கள் என்றும் குடும்ப நிகழ்வுகளில் கூட அவர்கள் இணைந்து பங்கேற்பது இல்லை என்பது போன்று செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அதன் பிறகு சோசியல் மீடியாவில் தாங்கள் ஒன்றாக இருப்பது போல ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராய் தரப்பில் முற்றுப்புள்ளி வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்வில் ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளதுடன் சுற்றுலா பயணமாக வெளியே கிளம்பி சென்று விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயமும் வழக்கம் போல அமிதாப்பச்சன் குடும்பத்திற்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே இப்போதும் கருத்து வேறுபாடு தொடர்கிறது என்கிற பரபரப்பை மீண்டும் துவங்கி வைத்து உள்ளது.