ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
அபியும் நானும் என்ற தொடரில் முகிலன் என்ற கதாபாத்திரத்தில் நித்திஷ் என்ற சிறுவன் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். நடிக்கும் போது க்யூட்டாக சேட்டை செய்து மக்களை கவர்ந்து வரும் நித்தீஷ் தற்போது அதைவிட பெரிதாக சாதித்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். 7 வயதான முகிலன் 60 கார்டூன் கதாபாத்திரத்தின் பெயர்களை 60 நொடிகளில் வேகமாக கூறி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கார்டூன் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ள நித்தீஷ் சாதனை செய்தால் தான் பெரிய ஆளாக வர முடியும் என நெத்தியடியாக பேட்டி கொடுத்துள்ளார். இந்த சிறு வயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என துடிப்பாக இருக்கும் நித்தீஷூக்கு சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.