எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காத ஒரு படமாக இருக்கும் படங்களில் 'பாட்ஷா' படத்திற்கும் தனி இடமுண்டு. சத்யா மூவீஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்த இப்படம் ஜனவரி 12ம் தேதி 1995ம் ஆண்டு வெளிவந்தது.
அதற்கு முன்பு வெளிவந்த ரஜினி படங்களைக் காட்டிலும் இந்தப் படம் பெற்ற வெற்றி பெரிய வெற்றியாக அமைந்தது. அமிதாப்பச்சன் நடித்து ஹிந்தியில் வெளிவந்த 'ஹம்' படத்தின் ரீமேக்தான் இப்படம் என்றாலும் ஒரு நேரடி தமிழ்ப் படத்தைப் பார்த்த உணர்வுதான் இப்படத்தைப் பார்க்கும் போது பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
ஒரு ஆக்ஷன் படத்தில் இந்த அளவிற்கு சென்டிமென்ட் காட்சிகளையும் வைக்க முடியுமா என அப்பா, அம்மா, தம்பி, தங்கைகள், நண்பன் என சென்டிமென்ட்டுகளுக்கும் குறைவில்லாத படம். காதலும், காமெடியும் கூட படத்தில் சரி விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.
எம்எஸ்வி, இளையராஜா என இருவரும் ரஜினி படங்களுக்கு இசையமைத்து வரலாறு படைத்தவர்கள். அவர்களுக்கு ஈடாக 'பாட்ஷா' படத்தில் பின்னணி இசை, பாடல்கள் என தேவாவும் தன் திறமையை வெளிப்படுத்தினார் என்பது மிகையல்ல.
இந்தக் காலத்திலும் வெளிவரும் பல ஹீரோயிசப் படங்களுக்கு இருக்கும் ஒரே ரெபரென்ஸ் 'பாட்ஷா' தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ரஜினியின் அசத்தல் ஆக்ஷன் படங்களில் எது நம்பர் 1 என்று கேட்டால், இந்தக் கால குழந்தைகள் கூட 'பாட்ஷா' என்றுதான் சொல்லுவார்கள்.