''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கொரோனாவின் ஒமிக்ரான் அலை மிக வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் தியேட்டர்களை அரசு மூடாமல் 50 சதவீத அனுமதியுடன் நடத்த உத்தரவிட்டுள்ளது. இரவு நேரங்களில் 10 மணிக்கு ஊரடங்கு ஆரம்பமாவதால் பல தியேட்டர்களில் காலைக் காட்சி, மதியக் காட்சி என இரண்டு காட்சிகளைத்தான் முழுமையாக நடத்த முடியும். மாநகரங்களில் மாலைக் காட்சி 6.30 மணி அல்லது 7 மணிக்கு நடந்தால் படம் முடிய இரவு 10 மணி கடந்துவிடும். அதனால், பலர் அந்தக் காட்சிகளுக்கு வர வாய்ப்பில்லை. குறைவான ரசிகர்கள் வந்தால் காட்சிகளை ரத்தும் செய்துவிடுவார்கள். மேலும், ஞாயிறு ஊரடங்கு என்பதும் தியேட்டர்கள் நடக்காது என்பதால் அன்றைய விடுமுறை வருவாய் இழப்பும் ஏற்படும்.
பொங்கலுக்கு 8 படங்கள் வரை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மேலும் சில சிறிய படங்கள் இணையும் எனத் தெரிகிறது. 50 சதவீத இருக்கை, குறைவான காட்சிகள் என இத்தனை படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைத்து அவர்கள் போட்ட முதலீட்டை எப்படி எடுப்பார்கள் என்ற கேள்வியும் திரையுலகத்தில் எழுந்துள்ளது.
கடந்த இரண்டு அலைகளின் போதும் இது மாதிரி பல சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகின. அவற்றில் வசூலைப் பெற்ற படங்கள் என விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கின்றனர் கோலிவுட்டில். கடந்த வருட பொங்கலின் போது விஜய் நடித்த 'மாஸ்டர்' மட்டும் 50 சதவீத இருக்கைகளில் பெரிய வசூலைக் குவித்தது. இந்த வருடப் பொங்கலுக்கு அப்படி எந்த பெரிய படமும் வரவில்லை.
பொங்கலுக்கு எல்லோரும் குடும்பத்துடன் எங்காவது செல்ல விரும்புவார்கள். கடற்கரை, கோவில்கள், சுற்றுலா தளங்கள் என சென்று வர பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அவற்றுடன் ஒப்பிடும் போது மக்கள் தியேட்டர்களுக்கு வருவதில் தயக்கம் காட்ட மாட்டார்கள் என திரையுலகத்தினர் எதிர்பார்க்கிறார்களாம்.
இத்தனை படங்களுக்கு மத்தியில் எத்தனை படம், எப்படி மக்களை வரவழைத்து, வசூலை அள்ளப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.