தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
90களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர் இப்போதும் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாகவே சில படங்களில் நடித்து வருகிறார். அவர் மனைவி ஜீவிதா நடிப்பை விட்டு ஒதுங்கி தயாரிப்பு, டைரக்ஷன் என கவனித்து வருகிறார். பெற்றோரைப் போலவே இவர்களது இரண்டு மகள்களான சிவாத்மிகா மற்றும் ஷிவானி இருவரும், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். கடந்தமாதம் சிவாத்மிகா நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படமும், சமீபத்தில் ஷிவானி நடித்த அன்பறிவு படமும் தமிழில் வெளியானது
இந்த நிலையில் தற்போது டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் சேகர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரது மகளாக சொந்த மகளான ஷிவானியே நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல ராஜசேகரின் மனைவி ஜீவிதா தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதைப்படி மட்டுமல்ல நிஜத்திலும் கூட இது ஒரு குடும்பப் படமாக உருவாகி வருகிறது என்று கூட சொல்லலாம்.