நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
தொடர்ந்து எம் ராஜேஷ் இயக்கும் படங்களுக்கு இசையமைத்து வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அதேபோல ஜெயம் ரவி நடித்த தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் ஆகிய படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடைசியாக 2019-ல் காப்பான் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம் மற்றும் லெஜன்ட் சரவணா நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இந்த நிலையில் ஜெயம் ரவி - எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மீண்டும் இந்த இருவருடனும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் கூட்டணி அமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.