8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் |
தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தாண்டு இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‛சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்ததோடு 4 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்தார்.
இப்படம் தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா பேசும்போது, ‛‛குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு பிடிக்கும். அதை பெருமையாக கருதுகிறேன். எனது சினிமா கேரியரில் இளம் வயதில் அதிகளவிலான அம்மா ரோலில் நடித்துள்ளேன். ஒரு நடிகையாக இருப்பவர் எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும். அப்படி நடிப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் 4 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன். அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் என இயக்குனர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்'' என்றார்.