ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரமான இந்த வாரத்தில் 5 படங்கள் வெளியாக உள்ளன. ஜூலை 10 வியாழன் அன்று சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடித்த 'ப்ரீடம்' படம் வெளியாகிறது. இந்தப் படம் இலங்கை அகதிகளைப் பற்றிய ஒரு படம். சசிகுமார் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படமும் இலங்கை அகதிகளைப் பற்றிய ஒரு படம்தான்.
ஜூலை 11ம் தேதி 'தேசிங்கு ராஜா 2, மாயக்கூத்து, மிசஸ் அண்ட் மிஸ்டர், ஓஹோ எந்தன் பேபி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. 'தேசிங்கு ராஜா' படத்தின் முதல் பாகம் 2013ல் வெளிவந்து வெற்றி பெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் வருகிறது. 'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
'மிசஸ் அண்ட் மிஸ்டர்' படத்தை வனிதா விஜயகுமார் இயக்கி, நாயகியாகவும் நடித்துள்ளார். அவரது மகள் ஜோவிகா படத்தைத் தயாரித்துள்ளார். சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்பு என்ன என்பதை கற்பனை கலந்த த்ரில்லர் படமாகக் கொடுக்க உள்ளது 'மாயக் கூத்து'.
இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் அனைத்து பட்ஜெட் படங்கள்தான். இம்மாதிரியான படங்களுக்கு படங்கள் வெளிவந்த பிறகே அவற்றின் தரத்தைப் பொறுத்துத்தான் வரவேற்பு அமையும்.