'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
குண்டு குண்டு கண்ணங்களுடன் மான் விழி போன்ற கண்களுடன் செஞ்சு வைத்த சிலை போல் பகல்நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வந்தவர் தான் ஷிவானி நாராயணன். முதல் தொடரிலேயே தன் அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தொடர்ந்து சீரியல்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றிய ஷிவானி, பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கையோடு சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த ஷிவானிக்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகியது. பலரும் ஷிவானிக்காக லைக்ஸ்களை பறக்கவிட்டனர். இதனால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென அதில் மட்டுமே கவனம் செலுத்தி, ஆரம்பித்த ஷிவானி, அதற்காக உடல் எடை குறைப்பதற்காக ஜிம் செல்வதிலிருந்து, மாடலிங், கவர்ச்சியான போட்டோஷுட்டுகள் என தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.
ஒருகட்டத்தில் அழகாக வேண்டுமென இவர் எடுத்த முயற்சிகள் இவருக்கே எதிராக திரும்பியது. அவரது அழகிய முகத்தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. அப்போதே ரசிகர்கள் பலரும் இவர் முகத்திற்கு ஆப்ரேஷன் செய்கிறாரா? என கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், ஷிவானி அண்மையில் வெளியிடும் புகைப்படங்களில் அவரது முகத்தோற்றமே முற்றிலும் மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். ஒருகாலத்தில் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்காக தவம் கிடந்த ரசிகர்களே தற்போது அவரது புகைப்படங்களை பார்த்து 'எப்படி இருந்த ஷிவானி இப்ப இப்படி ஆகிட்டாங்கேளே?' என பரிதாபமாக பதிவிட்டு வருகின்றனர்.