அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சின்னத்திரையில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இப்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். இவரது வேடம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பொன்ராம் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். போலீஸ் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கிறார். ஷிவானியும் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளார். படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக இவர் நடிக்கிறாரா அல்லது இவருடன் பயணிக்கும் வேடத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் தெரியவில்லை.