‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று 'நீதானே எந்தன் பொன் வசந்தம்'. ஜெய் ஆகாஷ், தர்ஷனா அசோகன், சோனியா, சத்ய ப்ரியா உள்ளிட்டோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். ஆரம்பத்தில் சுவாரசியமான திரைக்கதையுடன் நகர்ந்து கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலங்களில் சறுக்கல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில் இந்த தொடர் 509-வது எபிசோடுடன் முடிவுக்கு வந்தது.
நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டம் இருப்பது போலவும், 7 வில்லிகள் 7 தீய சக்திகள், அம்மன், அமானுஷ்யம் என கான்செப்டுகளை வைத்து திரைக்கதை அமைத்து எபிசோடுகளை ஒளிபரப்பி வந்தனர். இப்போது எல்லாம் சரியாகி எபிசோடில் சுபம் என போட்டு இந்த தொடரை முடித்து வைத்துள்ளனர்.