பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! |
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா. இந்தாண்டுக்காகன 55வது பட விழா கோவாவில் நவ., 20ம் தேதி துவங்கியது. இந்த விழாவில் பல்வேறு தலைப்புகளில் திரைப்பிரபலங்கள் பங்கேற்று பேசினர். அதில் சினிமாவில் புதியவர்களுக்கான வாய்ப்பு குறித்து பாலிவுட்டின் முன்னணி நடிகை கிர்த்தி சனோன் பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து பாலிவுட் எனக்கு வரவேற்பு கொடுத்து வருகிறது. சினிமா பின்னணி இல்லாமல் ஒருவர் வந்தால் அவருக்கான அடையாளம் கிடைக்க காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் இரண்டு மூன்று படங்களுக்கு பின் நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் வெற்றி, சாதனையை யாராலும் தடுக்க முடியாது. நெப்போடிசத்திற்கு பாலிவுட்டை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. பார்வையாளர்களும், ஊடகங்களும் ஒரு காரணம். ஏனென்றால் அவர்களை பெரிதாக காட்டுவதால் ரசிகர்களின் எண்ணமும் அப்படியே அமைகிறது. இது ஒரு வட்டம் போலத்தான். என்னை பொறுத்தவரையில் திறமை இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் தேடி வரும், திறமை இல்லை என்றால் வாய்ப்புகள் குறைவு தான்'' என்றார்.