வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
பத்மஸ்ரீ விருதுப்பெற்ற பாடகர் சுரேஷ் வாட்கர், "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற ரேடியோ நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 1) இரவு 8 முதல் 9 மணி வரை பேச இருக்கிறார். இது பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‛‛என் சினிமா வாழ்க்கையில் நடைபெற்ற இனிப்பான, கசப்பான அனுபவங்கள் குறித்து இந்த ரேடியோ நிகழ்ச்சியில் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீங்கள் கேட்டால், பாடல்கள் வாயிலாக நல்ல கதைகளை கேட்கலாம். இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
ஒரு மணிநேர நிகழ்ச்சியான இதில் 8 பாடல்கள் இருக்கும் எனவும், ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சுவாரசியமான தகவல்களை சுரேஷ் வாட்கர் பகிர்வார் என்றும் கூறியுள்ளனர்.