மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

பழம்பெரும் ஹிந்தி பாடகர் சுரேஷ் வாட்கர் தனது பிறந்தநாளை மும்பையில் பத்திரிக்கையாளர்களுடன் பிரமாண்டமாக கொண்டாடினார். அதோடு புதிய வானொலி நிகழ்ச்சியான “ஏ ஜிந்தகி கேல் லகா லே” அறிமுகமும் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுரேஷ் வாட்கரின் மனைவி பத்மா வாட்கரும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சுரேஷ் வாட்கர் தனது இனிமையான குரலில் "சத்மா" திரைப்படத்தின் "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற எவர்கிரீன் பாடலை பற்றி பேசினார். மேலும் அந்த பாடலின் உருவாக்கம், பதிவும் பற்றியும் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் முதன்முறையாக ரேடியோ நிகழ்ச்சியில் சுரேஷ் வாட்கர் கலந்து கொள்கிறார். இந்த புதிய பயணத்தால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
தீபாவளி வரை ஒளிபரப்பாகும் இந்த வானொலி நிகழ்ச்சி ஒரு இசைப் பயணமாக இருக்கும். அதில் சுரேஷ் வாட்கர் தனது நினைவுகளிலிருந்து கேட்காத சில கதைகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளார். அதாவது அவரின் வாழ்க்கை பயணம், சினிமாவில் பாடகராக வளர்ந்தது, பாடல்களின் பதிவு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்கிறார்.
1955ல் ஆக., 7ல் பிறந்த சுரேஷ் வாட்கர் ஹிந்தி சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் பாடல்களைப் பாடியுள்ளார். "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற வானொலி நிகழ்ச்சிக்காக அவரது ரசிகர்களும், இசை ஆர்வலர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.