ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு கலக்கு கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் கனவுக்கன்னி என்றும் அழைக்கப்பட்டவர். அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் 'தடக்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த ஒரு படம் மட்டும்தான் ஜான்விக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் வெற்றி பெறவேயில்லை.
“ரூஹி, மிலி, மிஸ்டர் அன்ட் மிசஸ் மஹி” ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானது. கடந்த வாரம் வெளிவந்த 'உலாஜ்' படமும் தியேட்டர்களில் வெளியாகி தடுமாறி வருகிறது. முதல் படத்திற்குப் பிறகு சரியான வெற்றியைக் கொடுக்க முடியாமல் இருக்கிறார் ஜான்வி. “கன்ஜன் சக்சேனா, குட் லக் ஜெர்ரி, பவால்' ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.
தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ராம் சரணின் 16வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஹிந்தித் திரையுலகம் அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும் தெலுங்கில் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அம்மா ஸ்ரீதேவியைப் போல தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்று, பின் ஹிந்தியிலும் அந்த ராசியைத் தொடரவும் வாய்ப்புள்ளது. தேவரா வெற்றிதான் அவருக்கு பாலிவுட் வெற்றிக் கதவைத் திறக்க வேண்டும்.