'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி படத்தின் வைர விழாவை ரசிகர்கள் வருகிற ஜனவரி 6ம்தேதி மதுரையில் கொண்டாடுகின்றனர். பராசக்தி படம் 1952ல் தீபாவளிக்கு வெளியானது. சிவாஜி ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனும் இப்படத்தில்தான் அறிமுகமானார். கிருஷ்ணன், பஞ்சு இயக்கினார். பராசக்தியில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் மனதை தொட்டு போறவரே, ஓ ரசிக்கும் சீமானே, காகா காகா போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்றன.
கருணாநிதி இப்படத்துக்கு வசனம் எழுதியதுடன் முதல் தடவையாக பாடல்களும் எழுதினார். சிவாஜி இப்படத்தில் நடிக்க ரூ.250 சம்பளம் பெற்றார். பராசக்தியில் சிவாஜி பேசிய முதல் வசனமே சக்சஸ். இதில் வரும் கோர்ட் காட்சிகள் அப்போது திரையுலகையே கலக்கின. கவிஞர் கண்ணதாசன் நீதிபதியாக திரையில் அறிமுகமான முதல் படமும் இது. தமிழகத்தில் 10 தியேட்டர்களில் 100 நாட்களும் 60 தியேட்டர்களில் 50 நாட்களும் ஓடின. 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் முதலில் திரையிடப்பட்ட படம் பராசக்தி. கதை, வசனம் இசை தட்டாகவும் புத்தமாகவும் வந்த சமூக படமும் இதுவாகும்.
கொழும்பில் 294 நாட்களும், யாழ்ப்பானத்தில் 116 நாட்களும் ஓடி முதல் முதல் வெளிநாட்டில் வெள்ளி விழா கண்ட படம் என்ற பெயரையும் பெற்றது. பராசக்தி வந்து 60 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து வருகிற 6ம்தேதி மதுரையில் இதன் வைர விழாவை ரசிகர்கள் நடத்த உள்ளதாக சிவாஜி சமுக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் அறிவித்து உள்ளார். தமிழகம் முழுவதிலும் இருந்து சிவாஜி ரசிகர்கள் விழாவுக்கு வரவிருக்கிறார்களாம்.