சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகை மனோரமாவை ஒரு மேடையில் நடிகர் சோ 'ஆச்சி ஒரு பெண் சிவாஜி' என்று வர்ணித்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் மனோரமாவிற்கு அந்த பட்டத்துடன் டைட்டில் போட்டார்கள். ஆனால் இதனை மனோரமா ஏற்கவில்லை. 'என்னை பெண் சிவாஜி என்று அழைக்க வேண்டாம். சிவாஜியின் கால் தூசுக்குகூட நான் வரமாட்டேன்' என்று அதனை தடுத்து விட்டார்.
ஆனால் அவரை பெண் சிவாஜி என்று அழைக்கிற அளவிற்கு சாதனைகள் படைத்தார். சிவாஜி போன்று அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடத்தில் நடித்தது போன்று 'கண்காட்சி' என்ற படத்தில் மனோரமாவும் 9 வேடங்களில் நடித்தார்.
மனோரமா நடிக்க தயங்கி நின்றபோது படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜன் 'உன் திறமை மீது எனக்கு நம்பிக்கையிருக்கு. தைரியமா செய்' என்று நம்பிக்கையை ஊட்டினார். மனோரமாவுக்குச் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது, இப்படம்.
இன்று ஆச்சி மனோரமாவிற்கு 88வது பிறந்த நாள்.