‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
'ரெட்டைச்சுழி' படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்த ஆரி அர்ஜூனா பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆரி நடித்து முடித்துள்ள அலேகா, பகவான், டிஎன் 43, மண் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கிறது. சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் விஜய் மில்டன் தெலுங்கு, தமிழில் இயக்கும் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். 'ரப் நோட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
ஆரி போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது “ஆரி பார்ப்பதற்கு அமைதியாக தோன்றினாலும், உள்ளுக்குள் நெருப்பு போன்றவர். அந்த அமைதி தீ இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது வெறும் சாதாரண காவலர் வேடமல்ல , உணர்ச்சிகளால் நிரம்பிய, பன்முகத்தன்மை கொண்ட நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதற்கேற்ப ஆரி சரியான தேர்வாக இருந்தார்” என்றார்.