பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

80, 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இயக்குனராக ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது முதல்முறையாக ரேவதி தமிழில் ஒரு வெப் தொடரை இயக்கியுள்ளார். இதனை அவருடன் இணைந்து சித்தார்த் ராமசுவாமி என்பவரும் இயக்கியுள்ளார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியாமணி, ஆரி அர்ஜூனன் ஆகியோர் நடித்துள்ளனர். அம்ரிதா ஸ்ரீனிவாசன், சம்பத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்போது இந்த வெப் தொடரின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெப் தொடரின் தலைப்பு, முதல் பார்வை, டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.




