லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. என்றாலும் அதன்பிறகு தமிழில் அவருக்கு எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி திருமணத்திற்கு பிறகு கிடைக்கிற வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கியிருந்த ஜவான் படத்தில் நடித்திருந்த பிரியாமணி, அதன்பிறகு மலையாளத்தில் ஆபீஸர் ஆன் டூட்டி என்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஹிந்தி சினிமாவில் தென்னிந்திய சினிமா கலைஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்ற ஒரு கருத்து வெளியாகி வருகிறதே. இது குறித்த உங்களது அனுபவம் என்ன? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛நானும் அது போன்று சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். என்றாலும் நான் ஹிந்தி படங்களில் நடித்தபோது அப்படி யாரும் என்னை அவமதித்ததில்லை. எல்லோரையும் போல்தான் என்னிடத்திலும் பழகினார்கள். சில பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும் கொடுக்கிறார்கள். என் அனுபவத்தில் அவர்கள் தென்னிந்திய கலைஞர்களை அவமதிப்பது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை'' என்று கூறியிருக்கிறார் பிரியாமணி.