‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி |
அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஹன்ஸ் ஜிம்மர், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, சன்னி தியோல், ரவி துபே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படம் 'நமித் மல்கோத்ராவின் 'ராமாயணா'.
இப்படத்தின் அறிமுக டீசர் நேற்று யூ டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது. டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்த வீடியோ இதுவரையில் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்தப் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் தமிழ் நடிகையான சாய் பல்லவி நடிக்கிறார். நேற்று வீடியோவைப் பகிர்ந்து, “சீதா மாதாவின் ஆசீர்வாதத்துடன், தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோடிகளுடன் சேர்ந்து, காவியத்தை மீண்டும் உருவாக்க, அவரது பயணத்தை நான் அனுபவிக்கிறேன். இது போன்ற ஒரு நடிகர்கள் மற்றும் குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் நடிகையான சாய் பல்லவி இந்த பிரம்மாண்ட பான் இந்தியா இதிகாச திரைப்படத்தில் நடிப்பது முக்கியமான ஒன்று. வேறு எந்த ஒரு தமிழ் நடிகைக்கும் இப்படியான ஒரு ஆசீர்வாதம் கிடைத்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.