துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
2020ம் ஆண்டில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் 'தர்பார்' . இந்த படம் வெளியான காலகட்டத்தில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பையே பெற்றது. தற்போது மதராஸி பட புரோமொசன் நிகழ்வில் அளித்த பேட்டியில் தர்பார் படம் தோல்வி குறித்து பேசியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
அதன்படி, "தர்பார் படத்தை இன்னும் பிரம்மாண்டமாக, கவனத்துடன் இயக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த கதையில் நிறைய பயணங்கள் இருந்தது. அது எல்லாம் வேண்டாம் என சுருக்கி எடுத்தேன். ரஜினியை வைத்து நிஜமான இடங்களில் படமாக்க வேண்டாம் எனவும் கருதினேன். அப்பா, மகள் கதையாக தான் முதலில் அந்த கதை இருந்தது. நயன்தாரா படத்திற்குள் வந்தவுடன், அந்த கதையின் போக்கு மாறியது. மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக வந்து இருக்குமோ என தோன்றியது. குறுகிய காலத்தில் ரொம்ப சந்தோஷத்தில் நான் இயக்கிய படம். அந்த படத்தின் கதையை மிக சீக்கிரம் எழுதியது ஒரு காரணமாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.