வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
சமீபகாலமாக சிறிய பட்ஜெட்டில் உருவாகும் கன்னட படங்கள் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வரிசையில் தற்போது வெளிவந்து கல்லா கட்டிக் கொண்டிருக்கும் படம் 'சூ ப்ரம் சோ'. சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி, ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் நடித்துள்ளனர். ஜே.பி.துமினாடு இயக்கியுள்ளார். ஒரு கிராமத்துக்குள் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை மையமாக வைத்து காமெடியாக படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. பிரபல விநியோகஸ்தர் என்.எஸ் ராஜ்குமார் இதன் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார். படத்தின் நாயகனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னட படத்தை இயக்கிய ஜே.பி.துமினாட்டே இதனை இயக்குவார் என்று தெரிகிறது.