பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' |

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. பிஜுமேனன் - பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரங்களில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து வருகின்றனர். இதில் பிரித்விராஜின் கோஷி கதாபாத்திரத்தை தான் தெலுங்கில் டேனியல் சேகர் என்கிற பெயரில் ராணா டகுபதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மோகன்லாலை வைத்து தான் இயக்கியுள்ள ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் முகாமிட்டு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்தி வந்தார் பிரித்விராஜ். அந்த சமயத்தில் தான் அங்கே பீம்லா நாயக் ரீமேக்கில் ராணாவும் நடித்து வந்தார்.
பிரித்விராஜின் டைரக்சனை நேரில் பார்க்க ஆசைப்பட்ட ராணா, ப்ரோ டாடி படப்பிடிப்பு தளத்துக்கே வந்து அவரது டைரக்சன் திறமையை கண்டு ரசித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரித்விராஜ், கோஷி குரியனை டேனியல் சேகர் சந்தித்த நாள் என கூறி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.