ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கில் சுகுமார் டைரக்சனில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் புஷ்பா. செம்மரக்கடத்தல் பின்னணியில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் வரும் டிச-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் சேர்த்து பான் இந்தியா படமாக இது வெளியாகிறது.
அந்தவகையில் இதன் மலையாள பதிப்பில் அல்லு அர்ஜுனுக்காக குரல் கொடுத்து தனது டப்பிங் பணியை முடித்துள்ளார் மலையாள இயக்குனர் ஜிஸ் ஜாய். அல்லு அர்ஜுன் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கோத்ரி படம் முதற்கொண்டு தற்போது புஷ்பா வரை இவர் தான் அவருக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அடிப்படையில் டப்பிங் கலைஞரான ஜிஸ் ஜாய், 2003ல் அல்லு அர்ஜுனின் கங்கோத்ரி படத்திற்கு மலையாளத்தில் டப்பிங் பேசியதன் மூலமாகத்தான் சினிமாவிலேயே நுழைந்தார். அதன்பின்னர் பத்து வருடங்கள் கழித்து இயக்குனராக அவதாரம் எடுத்த இவர், இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். டைரக்சனில் இறங்கிய பின் டப்பிங் பேசுவதை குறைத்துக் கொண்டாலும் தனக்கு சினிமாவில் அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர் என்பதால் அல்லு அர்ஜுன் படங்களுக்கு மட்டும் விடாமல் தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார்.




