சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், கரண் ஜோஹர் மற்றும் நடிகர் ஜான் ஆப்ரஹாம் போன்றவர்கள் எப்போதுமே தென்னிந்திய மொழி படங்களை குறிப்பாக மலையாள படங்களை சிலாகித்து பாராட்டி வருபவர்கள். அதிலும் நடிகர் ஜான் ஆப்ரஹாம், மலையாள அய்யப்பனும் கோஷியும் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி, அதில் நடிக்கவும் இருக்கிறார்.
மலையாள சினிமா மீது கொண்ட தனி ஈடுபாடு காரணமாக இன்னும் ஒருபடி மேலே போய் தனது. ஜேஏ என்டர்டெய்ன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மலையாளத்தில் நேரடியாக ஒரு படம் தயாரிக்கும் வேலையிலும் இறங்கிவிட்டார் ஜான் ஆப்ரஹாம். இந்தப்படத்திற்கு மைக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. கடந்த அக்டோபரில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
நேற்று இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவை கேரளாவிலேயே நடத்திய ஜான் ஆப்ரஹாம் தானும் நேரிலேயே வந்து கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். தண்ணீர் மாத்தன் தினங்கள் படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்க, ரஞ்சித் சஜீவ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விஷ்ணு சிவபிரசாத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.




