பிளாஷ்பேக் : என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த 'ஸ்பூப்' கதை | பாலிவுட் பாடகர் முகமது ரபியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | அப்பாவாக போகும் ரெடின் கிங்ஸ்லி! | தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னட சினிமாவுக்கு வர வேண்டும் : கிச்சா சுதீப் அழைப்பு | தெறி படத்தை விட வசூலில் பின்தங்கிய பேபி ஜான்! | வாரணாசியில் சாய் பல்லவி சாமி தரிசனம் | குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி, சிவகார்த்திகேயன் | சப்தம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ | விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியானது | சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு |
மலையாளத்தில் மம்முட்டி நடித்த ராஜாதி ராஜா என்கிற படம் மூலம் இயக்குனரானவர் அஜய் வாசுதேவ். தொடர்ந்து, மாஸ்டர்பீஸ், ஷைலாக் என மம்முட்டி நடித்த படங்களை இயக்கிய அஜய் வாசுதேவ், தற்போது குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்திற்கு பகலும் பாதிராவும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கர்ணன், ஜெய்பீம் படங்களில் கதாநாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை சீதா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.