இரண்டு பாகங்களாக வெளியாகும் தேவாரா | வெனிஸ் நகரத்தில் ஐஸ்கிரீம் வாங்க வரிசையில் நின்ற சமந்தா | 16 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அஜ்மல் - விமலா ராமன் | நிஷா - கணேஷ் தம்பதிக்கு ஆண் குழந்தை | கார் விபத்தில் சிக்கிய சின்மயி : கோபமாக வெளியிட்ட பதிவு | எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி | திலீப்பின் தங்கமணி படத்தில் இணைந்த நான்கு ஆக்ஷன் இயக்குனர்கள் | 75 நாட்களில் 150 மில்லியனை நெருங்கிய துல்கர் சல்மானின் வீடியோ ஆல்பம் | ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் | அக்., 27ல் ரிலீஸாகும் கங்கனாவின் ‛தேஜஸ்' |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடுகிறார். இதுவரையில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடாத சமந்தா முதல் முறையாக இப்படத்தின் இயக்குனர் கேட்டுக் கொண்டதற்காக நடனமாடுகிறார். இதற்காக சமந்தாவிற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பாடலில சமந்தா கவர்ச்சியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பாடலின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் ஆரம்பமாகி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், கணேஷ் ஆச்சார்யா நடன இயக்கத்தில் பாடல் படமாகி வருகிறதாம். இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது.