என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் புரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. பின்னர் டெல்லியிலும் சில காட்சிகள் படமாக்க பட்டன. இதையடுத்து நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை பெருங்குடியில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இயக்குனரான நெல்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் பீஸ்ட் படத்தை பற்றிய அப்டேட் ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டார். 100 வது நாள் படப்பிடிப்பு நிறைவையொட்டி வெளியான அந்த புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் திலீப்குமார், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் அதில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் புகைப்படம் மட்டும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயர் அபர்ணா தாஸ்.
அபர்ணா தாஸ் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். பீஸ்ட் படத்தின் மூலம் அபர்ணாவுக்கு ரசிகர்கள் அதிகரிக்க போகிறார்கள்.