அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா அடுத்து தெலுங்கில் தயாராகி வரும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். மிகப் பிரம்மாண்டமாக, கிளாமர் பாடலாக உருவாக உள்ள இப்பாடலில் சமந்தா நடனமாடுவதற்கு அவருக்கு சம்பளமாக ஒன்றரை கோடி ரூபாய் தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் அதிரடியான கிளாமர் காட்ட சமந்தா தயாராகி உள்ளாராம். அதற்காக இப்போது தீவிர உடற்பயிற்சியில் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. சமந்தா எப்போதுமே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டுபவர். ஒரே ஒரு பாடல் என்பதால் அதில் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.
சமூகவலைதளத்தில் சமந்தாவின் உடற்பயிற்சி போட்டோவைப் பார்ப்பவர்கள் சமந்தாவின் 'பிட்' ஆன தோற்றத்திற்குக் கண்டிப்பாக லைக் போட்டிருப்பார்கள்.




