பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளவம் வாங்கும் நடிகை நயன்தாரா தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 5 கோடி வரை சம்பளமாக வாங்குவதாகச் சொல்கிறார்கள். மற்ற முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட இது இரு மடங்கு அதிகமும் என்பது கூடுதல் தகவல். தெலுங்கில் நயன்தாரா தற்போது சிரஞ்சீவி நடிக்கும் 'காட்பாதர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நயன்தாராவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள 'லூசிபர்' படத்தின் ரீமேக் தான் இந்த 'காட்பாதர்'. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். படம் முழுவதும் இடம் பெறாத குறைவான காட்சிகள் கொண்ட கதாபாத்திரம்தான். இருந்தாலும் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என சிரஞ்சீவி சொன்னதாக டோலிவுட்டில் தகவல் உண்டு. அதனால்தான் இவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறார்களாம்.
தெலுங்கில் ஒரு படத்திற்காக ஒரு கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச சம்பளம் இது என்கிறார்கள்.




