நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்குள் அந்தப் படம் பற்றிய தகவல்கள் திரையுலக வட்டாரங்களில் எப்படியாவது 'லீக்' ஆகிவிடும். விஜய் 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே அப்படம் பற்றிய தகவல்கள் வெளியானது. தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளதாகவும் தமிழ், தெலுங்கில் அப்படம் உருவாகப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதற்குப் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் விஜய் 66 படத்தின் கதை இதுதான் என டோலிவுட் வட்டாரங்களில் 'லீக்' ஆகி உள்ளது. 'எரோடோமேனியா' என்ற ஒரு அரிய வகை மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாம் விஜய்க்கு. ஒரு பிரபலம், பெரும் பணக்காரர், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக நினைத்துக் கொள்வாராம். ஆனால், அந்தப் பெண் உண்மையிலேயே அவரைக் காதலிக்க மாட்டாராம். இதுதான் படத்தின் மையக் கரு என்று பரவியுள்ளது.
இதுதான் ஆரம்பம், இன்னும் எத்தனை கதைகள் இப்படி ரவுண்டு வரப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.