சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'விஜய் 66' படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தற்போது ஷங்கர் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கும் தமன் தான் இசையமைத்து வருகிறார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். எனவே விஜய் 66 படத்துக்கு அவர் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.