ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
திரையுலகில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போது காதல் வசப்பட்ட நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணைவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான். அஜித்-ஷாலினி போல அழகாக நீடிக்கும் திருமண பந்தங்களும் உண்டு. இயக்குனர் விஜய்-அமலாபால் போல குறுகிய காலத்திலேயே முறிந்து போகும் திருமணங்களும் உண்டு. அந்த வகையில் நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யா திருமண உறவிலும் மிகக்குறுகிய காலத்திலேயே விரிசல் விழுந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிலேயே சமீபத்திய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன
இவர்களது திருமணம் நடைபெற்று இன்னும் நான்கு வருடங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், கடந்த சில வாரங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் விவாகரத்து பெறப்போகின்றனர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளும் அதை உறுதிப்படுத்துவது போலவே இருக்கின்றன. அதேசமயம் இவற்றை அவர்கள் இருவரும் நேரடியாக மறுக்கவோ விளக்கம் சொல்லவோ இல்லை.
இந்தநிலையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இவர்களது நான்காவது திருமண நாள் வருகிறது. கண்டிப்பாக அன்றைய தேதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் வாழ்கிறார்கள் என்பதற்கான ஆதார செய்தியோ புகைப்படமோ அல்லது வாழ்த்தாவது நிச்சயம் வெளியாகும். இல்லையென்றால், மீடியாக்களில் வருவதுபோல இவர்கள் இருவரின் பிரிவும் உண்மைதான் என்பது நிச்சயமாகத் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்