சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சென்னை : ''யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் நான் புகார் கூறியது இல்லை. சொல்ல வேண்டும் என்றால், நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு அது பிடிக்காது. என் பிரச்னை நிச்சயம் முடிவுக்கு வரும். அதை நானே பார்த்துக் கொள்வேன்,'' என சிலம்பரசன் கூறினார்.
நடிகர் சிலம்பரசன் நேற்று அளித்த பேட்டி: மாநாடு படம், 'டைம் லுாப்'பில் அரசியலை கலந்து உருவாக்கியுள்ள படம். இது முற்றிலும் அரசியல் படம் இல்லை. பின்னணியில் மட்டுமே அரசியல் கொஞ்சம் இருக்கும். மாநாடு இசை வெளியீட்டு விழாவில், முதலில் சிரிச்சுட்டு தான் இருந்தேன். இதற்கு முன் 'வாலு' படத்திலேயே எனக்கு நிறைய பிரச்னை வந்தது.
அதையெல்லாம் கடந்து வந்துள்ளேன். ஆனால், இந்த 'மாநாடு' படம் ரொம்ப உணர்ச்சிகரமான படமாகி விட்டது. பல முறை நின்று போய், ஆரம்பமானது. இடையில் கொரோனா, உடல் இளைப்பு என பல பிரச்னை ஏற்பட்டது. உள்ளுக்குள் இருந்த வலியால் தான் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன்.
என் திருமணம் நடக்கும் போது நடக்கும். அதுவரை என் வேலையை நான் செய்கிறேன். நான் உடல் எடையை குறைக்கும் போது, சின்ன இடைவேளை விட்டால் மீண்டும் உடல் எடை கூடிவிடுகிறது. இதில் இருந்து முற்றிலும் வெளியே வருவது கடினமாக இருந்தது. கொரோனா காலத்தில், இரண்டு மாதம் திட உணவை முற்றிலும் தவிர்த்து விட்டேன். அதுபோக உடற்பயிற்சியிலும் ஈடுபட்டேன். 27 கிலோ குறைந்துள்ளேன். இந்த திடீர் மாறுபாட்டை, நம் உடலின் அஜிரண சக்தி அதை ஏற்றுக் கொள்வது கடினம் ஏற்றுக் கொண்ட பின் சுலபமாகிவிடும்.
என்னால் முடிந்த அளவுக்கு நான் சக கலைஞர்களை தட்டிக் கொடுத்து வருகிறேன். என் 50வது படம் வரை படங்களில் மட்டுமே கவனம் இருக்கும். இப்போது 47 வது படம் போய் கொண்டிருக்கிறது. நிறைய படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும். அதற்கான கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறேன். தயாரிப்பாளர் தரப்பில் என் மீது கூறப்படும் பிரச்னையை பொறுத்தவரை, யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் நான் புகார் கூறியது இல்லை.
சொல்ல வேண்டும் என்றால், நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு அது பிடிக்காது. என் பிரச்னை நிச்சயம் முடிவுக்கு வரும். அதை நானே பார்த்துக் கொள்வேன். பிரச்னை என்றால் மட்டுமே அதுப்பற்றி நான் பேசுவேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தது இல்லை.
என்னை ஆளாக்கிய ரசிகர்களை அரசியலை தவிர்த்து வேறு விதமாக அழைத்துச் செல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது, அதற்காக சில வேலைகளை செய்து வருகிறேன். அதைப்பற்றி விரைவில் தெரிவிப்பேன். சினிமா தற்போது மாறி வருகிறது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டும். வித்தியாசமான கதைகளை தர வேண்டும். இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.