தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னையில் நடந்த 'மிடில்கிளாஸ்' படவிழாவில் ஒரு காலத்தில் 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டதை உருக்கமாக பேசியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
அவர் பேசியது: ''சினிமா ஆசையில்தான் சென்னை வந்தேன். என் முதல் படம் ரிலீஸ் ஆன நாளில் என் திருமணம் நடந்தது. ஆனால், அதற்கு முன்பு நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒரு தடவை வேலைக்காக சென்னையில் இருந்து பெங்களூரு சென்றேன். அதுவும் 5 ஆயிரம் சம்பளத்துக்காக, பின்னர், கம்பெனி சார்பில் சென்னைக்கு பிளைட்டில் வந்தபோது என்னிடம் பணம் அதிகம் இல்லை.
அப்போது எனக்கு ஏர்போர்ட்டில் ஒரு போட்டியில் குலுக்கல் முறையில் டிவி விழுந்தது. அதை வாங்க சில நடைமுறைகள் சொல்லி 300 கேட்டார்கள். ஆனால், என்னிடம் அப்போது கை வசம் 150 ரூபாய்தான் இருந்தது. மீதியை புரட்ட முடியாமல் தவித்தேன். அந்த டிவியை என்னால் வாங்க முடியவில்லை. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து ஓரளவு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்.
இன்னும் சில ஆண்டுகள் அடிப்படை வாழ்க்கைக்கு எந்த கஷ்டமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறேன். மிடில்கிளாஸ் படத்துக்கு என்னிடம் பணியாற்றிய பிரணவ் இசையமைத்து இருப்பது மகிழ்ச்சி. என்னிடம் பணியாற்றி பலர் இசையமைப்பாளர் ஆனது கூடுதல் மகிழ்ச்சி'' என்றார்.