ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! |

சமீபத்தில் 2024ம் வருடத்திற்கான கேரள மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 9 விருதுகளை பெற்ற நிலையில் அதற்கு அடுத்ததாக போகன்வில்லா திரைப்படம் ஏழு விருதுகளை பெற்றுள்ளது. அமல் நீரத் இயக்கிய இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் சுசின் ஷியாமுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமாக இவர் தான் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கும் இசையமைத்தவர்.
தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சுசின் ஷியாம், எனக்கு சிறந்த இசையமைப்பாளராக மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கு தான் விருது கிடைக்கும் என்று நான் ரொம்பவே எதிர்பார்த்தேன். அந்த படத்திற்காக எனக்கு இந்த விருந்து கிடைத்திருந்தால் இன்னும் அதிகம் சந்தோஷம் அடைந்திருப்பேன். அப்படி அந்தப் படத்திற்காக விருது கிடைக்காததில் கொஞ்சம் வருத்தமே என்று கூறியுள்ளார்.
ஆனால் ரசிகர்கள் பலரும், “கவலைப்படாதீர்கள்.. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை தான் உறுதுணையாக இருந்தது. உங்களுக்கென்று தனித்துவமான இசைக்கு போகன்வில்லா படத்திற்காக விருது கிடைத்ததற்கு பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்” என்று கிண்டல் கலந்த விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.