போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
விஜய்யுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இந்தநிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ள விஜய் அடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் விஜய் நடிப்பது குறித்து தயாரிப்பார் தில்ராஜூ அறிவித்ததை அடுத்து கீர்த்தி சுரேஷ் அப்படத்தில் நாயகியாக நடிப்பதாகவும் ஒரு செய்தி மீடியாக்களில் வெளியாகி வருகிறது. இந்தநிலையில் தெலுங்கு மீடியா ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்தபோது, விஜய் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய்யின் புதிய படத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லி சில மாதங்களாக மீடியாக்களில் ஓடிக் கொண்டிருக்கும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.