அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மலையாள திரை உலகில் தயாரிப்பாளர்களின் நலனை காப்பாற்றும் விதமாகவும் திரைப்படங்களில் ஹீரோக்களின் தலையீடு, பட்ஜெட், சம்பளம் ஆகியவற்றை முறைப்படுத்தும் விதமாகவும் வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து ஸ்ட்ரைக் தொடங்க இருக்கிறது என்று பிரபல தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான தயாரிப்பாளர் சுரேஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல நடிகர்களே படங்களின் தயாரிப்பாளராக மாறுவதற்கும் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். இவரது இந்த கருத்துக்கு சமீபத்தில் நடிகர் விநாயகன் சினிமா என்ன உங்கள் குடும்ப சொத்தா என்று எதிர் கேள்வி எழுப்பி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
இந்த நிலையில் ஜூன் மாதம் சினிமா ஸ்ட்ரைக் தொடங்குகிறது என இவர் கூறிய கருத்துக்கு மோகன்லாலை வைத்து தொடர்ந்து ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வரும் அவரது ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளதுடன் சுரேஷ்குமாரிடம் பல கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.
“தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஜூன் மாதம் முதல் போராட்டம் என அறிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தா? அல்லது தயாரிப்பாளர் சங்கம் ஒன்று கூடி எடுத்த முடிவா? தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்திருந்தால் அதை இன்னும் ஏன் வெளிப்படையாக அறிக்கையாக வெளியிடவில்லை. அப்படி சுரேஷ்குமார் எடுத்த முடிவு தவறு என தற்போது எதிர்ப்பு வலுக்கும் நிலையில் அவரது முடிவு சரியாக இருந்தால் தயாரிப்பாளர் சங்க முக்கிய பொறுப்பாளர்களான ஆன்டோ ஜோசப் போன்றவர்கள் ஏன் அவரை ஆதரித்து இதுவரை எதுவும் கருத்து கூறவில்லை?
தயாரிப்பாளர் சுரேஷ்குமார் இப்படி தன்னிச்சையாக தனது முடிவுகளை தயாரிப்பாளர் சங்கமே எடுத்துள்ளது போன்று அறிவித்திருப்பது சரியானது அல்ல. ஒவ்வொரு படத்தையும் நம்பி 100 முதல் 1000 குடும்பங்கள் பிழைக்கின்றன. அதை தடுத்து நிறுத்துவது தவறான செயல்” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்தை நடிகரும் இன்னொரு தயாரிப்பாளருமான பிரித்விராஜ் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இன்னும் சில நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கூட ஆண்டனி பெரும்பாவூரின் கருத்தை ஆதரித்து பேசி வருவதால் தயாரிப்பாளர் சுரேஷ்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.