நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஸ்ரீசூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஹரி ஹர வீர மல்லு". இப்படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் 3வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத் நகரில் நடைபெற்றது.
இதில் ஹீரோயின் நிதி அகர்வால் பேசியதாவது: ‛‛எனக்கு மிகவும் சவாலான படமாக ஹரிஹர வீர மல்லு படம் இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இதற்காக மட்டும் தேதிகளை ஒதுக்கி நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது.
பவன் கல்யாண் உடன் நடித்தது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட். அவ்வளவு அற்புதமான நடிகர், நல்ல கோ ஸ்டார். மனித நேயம் மிக்கவர். இந்த படம் வெளியான பிறகு என்னை தேடி பல வாய்ப்புகள் நிச்சயம் வரும். தமிழிலும் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ்த் திரையுலகிளும் என்னை பார்க்கலாம்'' என்றார்.