ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளரான சாம் சி.எஸ் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் இந்த புகாரை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், நான் தயாரித்த 'தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு' படத்திற்கு இசையமைக்க 25 லட்சம் வாங்கிவிட்டு படத்திற்கு இசையமைக்காமலும் பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 2020ல் சலீம் அலிகான் தயாரிக்கும் 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' என்ற படத்துக்கு இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தார். பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாத அவர், திடீரென்று முழு படத்தையும் முடித்ததாக சொல்லி, என்னை இசையமைக்க கேட்டார். காலதாமதமாகும் என்று சொன்னேன். காத்திருப்பதாக சொன்ன அவர், கோவை காவல்நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். எனது தரப்பில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டது. பிறகு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். செயலாளர் எஸ்.கதிரேசன் முன்னிலையிலும், இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டு, தயாரிப்பாளரின் நிலையை மனதில் கொண்டு, நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, ஏற்கனவே இப்படத்துக்கு சில பாடல்களுக்கு நான் இசையமைத்தாலும், நான் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர முடிவு செய்தேன். அதற்கு யோசித்துவிட்டு பேசுவதாக சொன்ன சலீம் அலிகான், கோயம்பேடு காவல்நிலையத்தில் என் மீது மோசடி புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியானதை அறிந்து இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
சிலரது தூண்டுதலால் என்னை பற்றி அவதூறு பரப்பி, என்னிடம் பணம் பறிக்கும் தீயஎண்ணத்துடன் அவர் இருக்கிறார். எனது விளக்கத்தை காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் அளிப்பேன். சமீர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு சாம் சி.எஸ் கூறியுள்ளார்.