தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
சென்னையில் நேற்று நடந்த ராஜபுத்திரன் பட விழாவில், அதில் அப்பா கேரக்டரில் நடித்த பிரபு கலந்து கொண்டார். அவருக்கு சற்றே உடல்நலம் சரியில்லை என்றாலும், அதை பொருட்படுத்தாமல் மேடை ஏறியவர், படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவர் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். இதுவரை தான் 74 புதுமுக இயக்குனர் படங்களில் நடித்துவிட்டேன். இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறேன். இந்த படத்தில் வெற்றி அப்பாவாக வருகிறேன். படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள், எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது. இதில் ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்றேன். ஆனாலும் ஆட வைத்துவிட்டார்கள். அந்த குத்து பாடலை அண்ணன் டி.ஆர். பாடியிருக்கிறார். அவருக்கு நன்றி.
நானும் சின்னபசங்க மாதிரி ஆகிவிட்டேன். இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. இதில் புதுமுக கிருஷ்ணபிரியா ஹீரோயின். அவர் பாடல்கள் அருமை. கதைப்பபடி எனக்கும், அவருக்கும்தான் சண்டை, இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா, என் மீது, என் மகன் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. என்னை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஜி.எம்.குமார் ஆகியோருடன் இதில் இணைந்து நடித்து இருக்கிறேன். பல இயக்குனர்கள் காமெடியன், குணசித்திர கேரக்டருக்கு மாறிவிட்டார்கள்'' என்றார்.