நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் சேரன் நரிவேட்டை என்ற மலையாள படத்தில் சற்றே வில்லத்தனமான போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த அந்த படம் தமிழிலும் டப்பாகி நேற்று வெளியாகி உள்ளது. வயநாட்டில் நில உரிமைக்காக போராடும் பழங்குடி மக்களை அடக்க ஒரு போலீஸ் டீம் செல்கிறது. அதில் அதிகாரியாக இருப்பவர் சேரன். சாதாரண போலீசாக இருப்பவர் டொவினா. அங்கே கலவரம் வெடிக்க என்ன நடக்கிறது என்பது கதை. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சற்றே நெகட்டிவ் ரோலில் சேரன் நடித்த படம் இது. எப்படி நடிச்சீங்க என்றால், ‛இஷ்க் என்ற அருமையான படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர், அவரின் அடுத்த படம் இது. என் கேரக்டர் பிடித்து இருந்தது. தவிர, படத்தில் சொல்லப்படும் கரு அழுத்தமானது. அதனால், நரிவேட்டையில் அப்படி நடித்தேன். இயக்குனர்தான் என்னை அந்த ரோலுக்கு தேர்ந்தெடுத்தார். இதே தேதியில் என்னுடைய ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் ஆக இருந்தது. ஒரே நேரத்தில் 2 போட்டி வேண்டாம் என்று, அந்த பட தேதியை ஒத்தி வைத்துவிட்டேன்' என்கிறார்.