பீரியட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் : பரூக் ஜே.பாஷா ஆசை | மகனை நடிகனாக்கிய தயாரிப்பாளர் | தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை |

சினிமாவில் அறிமுகமாகும்போது எல்லா நடிகைகளும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பார்கள். ஆனால் காலப்போக்கில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் அபூர்வமாக ஒரு சில நடிகைகளே சொன்ன சொல்லை கடைசிவரை காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சுஜாதா. சுஜாதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. அப்பா சங்கர மேனன், ரொம்பவே ஆச்சாரமான குடும்பம். அதனால் சுஜாதா சினிமாவில் நடிக்கவே கூடாது என்று கூறிவந்தார் தந்தை. சுஜாதாவிற்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை.
சுஜாதாவின் அண்ணன் கோபிநாத் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்தார். அப்போது அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் நடிக்கவில்லை. அதனால் தனது தங்கை சுஜாதாவை சினிமாவில் நடிக்க வைத்து பெரிய நடிகையாக்க விரும்பினார். அவரது முயற்சியால் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
முதல் படம் 'தபஸ்வினி'. இதில் விதவையாக சோகமான கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததாலோ என்னவோ அவர் நடித்த 40 மலையாள படங்களிலும் சோகமான கேரக்டர்களிலேயே நடித்தார். 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' மூலம் தமிழுக்கு வந்தார். அதிலும் சோகமான கேரக்டர்தான்.
'அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, சந்திப்பு, தீர்ப்பு, திருப்பம், நூல்வேலி, பூந்தளிர், மயங்குகிறாள் ஒரு மாது, விதி' என விதவிதமான கேரக்டர்களில் நடித்தார். முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ஒரு கட்டத்தில் யார்யாருக்கெல்லாம், ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்தார். சுஜாதா நடித்த கடைசி படம் 'வரலாறு'. இதில் அஜித்தின் அம்மாவாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்த சுஜாதா, எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. பெரும்பாலும் சோக கேரக்டர்களிலேயே நடித்தார்.




