ரெட்ரோ 4 நாள் தமிழக வசூல் இத்தனை கோடியா? | ஜனநாயகன் படத்தில் குத்தாட்டம் போடுவது யார்? | இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ் | பாட புத்தகத்தில் சோழ பேரரசின் வரலாற்றை மறைப்பது ஏன்? மாதவன் கேள்வி | 13 ஆண்டுகளுக்குபின் சந்தானம் பட விழாவில் சிம்பு | கிராமத்து நடிகை பெருமாயி காலமானார் | ஜனநாயகனுக்காக 6 கிலோ மீட்டர் மலையில் நடந்த விஜய் | பிளாஷ்பேக்: முதல் கானா பாடல் | நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார் | பிளாஷ்பேக்: கடைசி வரை கவர்ச்சியாக நடிக்காத சுஜாதா |
தெலுங்கு சினிமாவில் முதல் நிலை நடிகர்களின் படங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிவது வழக்கமானது. இரண்டாம் நிலை நடிகர்களின் படங்களும் அங்கு வரவேற்பையும், வசூலையும் பெறுவது சாதனையான விஷயம்.
அடுத்தடுத்து மூன்று 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்ற நடிகராக சாதனை புரிந்துள்ளார் நானி. அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'ஹிட் 3' படம் அமெரிக்காவில் 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை நேற்றோடு கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 16 கோடிக்கும் சற்றே அதிகம். இதற்கு முன்னதாக கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'சரிபோதா சனிவாரம்', 2023ல் வெளிவந்த 'தசரா' ஆகிய படங்களும் 2 மில்லியன் வசூலைக் கடந்திருந்தன.
'ஹிட் 3' படம் அமெரிக்க வசூலையும் சேர்த்து 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வசூல் மூலம் தெலுங்கில் நானியின் வியாபார நிலை உயர்ந்துள்ளது.