மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் | தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கும் கன்னட ஹீரோயின்கள் | அப்பா நண்பர்கள் உதவவில்லை : மயில்சாமி மகன் அன்பு ஆதங்கம் | ''படம் முழுதும் பார்த்துட்டேன்; அற்புதம்'': கூலி அப்டேட் கொடுத்த அனிருத் | கலெக்டராக நடித்தது ஏன் : கே.பாக்யராஜ் விளக்கம் | ரெட்ரோ 4 நாள் தமிழக வசூல் இத்தனை கோடியா? | ஜனநாயகன் படத்தில் குத்தாட்டம் போடுவது யார்? | இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ் | பாட புத்தகத்தில் சோழ பேரரசின் வரலாற்றை மறைப்பது ஏன்? மாதவன் கேள்வி |
தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி, 85. பாரதிராஜாவின் ‛16 வயதினிலே' படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். செந்தில் உடன் இவர் பண்ணிய காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. அன்றைய ரஜினி, கமல் துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை நடித்து வருவதோடு ஹீரோவாகவும் அவ்வப்போது நடித்து வருகிறார்.
கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67. அந்தகாலத்திலேயே இவரை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார். கவுண்டமணி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நாளை(மே 6) காலை 11.30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற உள்ளது.