திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் கவுண்டமணி மனைவி சாந்தி நேற்று காலமானார். சினிமா துறையில், கவுண்டமணியுடன் இணைந்து பணியாற்றிய பலருக்கே கவுண்டமணி மனைவி எப்படி இருப்பார் என தெரியாது. அவர் மகள் திருமணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஒரு சில போட்டோக்கள் மட்டுமே நெட்டில் இருக்கின்றன. நேற்று தான் கவுண்டமணி மனைவியின் லேட்டஸ்ட் போட்டோ வெளியானது.
சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு கவுண்டமணி குடும்பத்துடன் வருவது இல்லை. அவருக்கு 2 மகள்கள், அவர்கள் எப்படி இருப்பார்கள் என பலருக்கும் தெரியாது. முத்த மகள் ஒரு மகன், மகள், இளைய மகளுக்கு ஒரு மகன் என 3 பேர குழந்தைகள் அவருக்கு இருக்கிறார்கள்.
பேரக்குழந்தைகளையும் கவுண்டமணி வெளியில் காண்பித்தது இல்லை. கவுண்டமணி மகள்கள் டாக்டர் என்பதிலும் உண்மை இல்லை. இரண்டு பேருமே சென்னையில் வசிக்கிறார்கள். தன்னால் குடும்பத்தினர் பிரைவசி பாதிக்க கூடாது என்பதால் இந்த முடிவாம். அந்த காலத்திலேயே சவுராஷ்டிரா இனத்தை சேர்ந்த சாந்தியை காதல் திருமணம் செய்தவர் கவுண்டமணி. மனைவி மீது மிகுந்த பாசமாக இருந்திருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக கடும் உடல் நலக்குறைவால் பாதிப்பட்டு, படுக்கையில் இருந்த அவரை வீட்டிலே தனி நர்ஸ் அமர்த்தி, பாசமாக பாதுகாத்து வந்துள்ளார் கவுண்டமணி. மற்றவர்களை சிரிக்க வைத்தவர், தனது மனதில் இருந்த இந்த சோகத்தை பெரும்பாலும் யாரிடமும் சொல்லவில்லை. இந்த தகவல் அவரின் நெருங்கியவர்களுக்கே நேற்றுதான் தெரிய வந்துள்ளது.